கிருஷ்ணகிரியில் லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் குமாரசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, "லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை அரசு இதுவரை ஏற்காததால் டிசம்பர் 27ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இதனால் ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தக ரீதியில் கணிசமான இழப்பு ஏற்படும். தமிழ்நாட்டில் லாரிகளுக்கு வாங்கப்படும் வேக கட்டுப்பாடு கருவி உள்ளிட்டவை குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டும் வாங்குவதற்கான அரசாணையை நீக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.
மாநில எல்லைகளில் உள்ள போக்குவரத்து சாவடிகளில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என நாங்கள் குற்றச்சாட்டு வைத்தபோது மாநில அரசு அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கே பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரி கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை