நாடு முழுவதும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிாி மாவட்டத்தில் அத்தியவசிய தேவை அல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரும் நபா்களை 14 நாள்கள் முதல் 28 நாள்களை வரை கரோனா சிறப்பு தடுப்பு மையங்களுக்கு கொண்டுச் சென்று தனிமைப்படுத்தப்படுவாா்கள் என்று மாவட்ட நிர்வாகம் அறவித்துள்ளது.
இந்நிலையில், இந்த அறிவிப்பு குறித்தும் கரோனா குறித்த விழிப்புணர்வு குறித்தும் பெத்ததாளபள்ளி ஊராட்சியில் உள்ள கிராமங்களில் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளி வெங்கடேஷன், செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர்.
ஆட்டோவில் ஊர் ஊராகச் சென்று பரப்பரை மேற்கொள்ளும் இவர்கள், பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்றும் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் முகக் கவசம், கிருமி நாசினிகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் தலைமையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை