கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த நாடார்கொட்டாய் பகுதியில் இன்று காலை மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து ஊர்ந்து சென்றுள்ளது. அப்போது அவ்வழியே வந்த வாகனம் மலை பாம்பின் மீது ஏறியதில், தலை நசுங்கி அங்கேயே உயிரிழந்தது.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், வெடி வெடித்து மேளதாளம் முழங்க பாம்புக்கு மாலை அணிவித்தனர். மஞ்சள், குங்குமம் தெளித்தும் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் வெள்ளைத் துணியில் பாம்பை சுற்றி அதனை வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
இதையும் படிங்க: ‘36 கோடியில் கூவம் ஆற்றங்கரையோரத்தில் மரங்கள் நடப்படும்’ - மாநகராட்சி ஆணையர்