கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் கனகதாவின் 532ஆவது ஜெயந்தி விழா, குறும்பர் இன சமுதாய மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவினைத் தொடர்ந்து பல்லாக்கு உற்சவத்துடன் பெண்கள் கலச ஊர்வலமும் நடைபெற்றது.
இதில் ஸ்ரீ கரிகால சாமி, ஸ்ரீ சிங்க வீரம்மா ஆகிய குறு தெய்வங்களுக்கு அலங்கார பூஜைகளும், குலத்தொழில் வழிபாடும் நடைபெற்றன. இதன்பின் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் ஆயித்திற்கு மேற்பட்டவர்கள் தங்களின் தலை மீது தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர் .
இந்த விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைப்பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டு கிராம தெய்வங்களை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க...கோயிலை அகற்றியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் !