ETV Bharat / state

‘கரோனாவை விரட்ட ஒத்துழையுங்கள்’ - கிருஷ்ணகிரி எஸ்.பி. - கரோனா வைரஸ் பரவல்

கிருஷ்ணகிரி: ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கங்காதர் கேட்டுக்கொண்டுள்ளார்.

krishnagiri sp request to people to obey curfew due to corona virus

author img

By

Published : Apr 11, 2020, 6:44 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறி வெளியே சுற்றித்திரிவோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தும், எச்சரித்தும் அனுப்பிவந்தனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் தற்போது வரை மூன்றாயிரத்து 671 வழக்குகள் பதியப்பட்டும், இரண்டாயிரத்து 371 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கங்காதர் தெரிவித்தார்.

மேலும், மக்கள் கரோனா வைரஸின் அச்சத்தை உணர்ந்து வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் எனவும், காவல் துறைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய அவர், இதனைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘வைகை புயல்’ பாடலில் காவல் துறையின் விழிப்புணர்வு வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.