ETV Bharat / state

கல்குவாரியிலிருந்து வெளியேறும் புகை - பொதுமக்கள் அவதி! - கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே கல்குவாரியிலிருந்து வெளியேறும் புகையினால் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகிறார்கள்.

ஒன்னல்பள்ளி கிராம சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கல்குவாரி
author img

By

Published : Oct 10, 2019, 8:34 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரையடுத்த ஒன்னல்பள்ளி கிராமத்தில் தனியார் கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. ஏற்கனவே இங்கு கல்குவாரி அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில், தற்போது அங்கு கற்களை உடைக்கும் இயந்திரத்திலிருந்து அதிகப்படியான புகை, தூசி வெளியேறுவதினால் எதிர்ப்பு வலுத்துள்ளது.

ஏனென்றால், அங்கிருந்து வெளியேறும் புகை, தூசியினால் அருகிலுள்ள பகுதிகள் முழுவதும் பனி சூழ்ந்தது போல் காட்சியளிக்கின்றது. மேலும் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கமுடியாமலும் வீட்டைவிட்டு வெளியேற முடியாமலும் தவித்து வருகின்றனர்.

ஒன்னல்பள்ளி கிராம சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கல்குவாரி

இதனால், கல்குவாரியை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படியுங்க:

'குரங்குகளும் நம் குழந்தைங்கதான்' - ஓய்வு பெற்ற டிஎஸ்பி மாலதியின் கருணைமிகு சேவை!

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கல்குவாரியிலிருந்து வெளியேறும் புகையால் கால்நடைகள் பாதித்து, விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்புBody:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கல்குவாரியிலிருந்து வெளியேறும் புகையால் கால்நடைகள் பாதித்து, விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஒன்னல்பள்ளி என்னும் கிராமத்தில் தனியார் கல்குவாரி அமைந்துள்ளது.

கல்குவாரி சுற்றிலும் விவசாய தோட்டங்களும், பசுமை நிறைந்த விளைநிலங்களுமாக காணப்படுகிறது.

முதன்முதலில் இங்கு கல்குவாரி அமைக்கப்படும் என பணிகள் மேற்கொண்டபோது அப்பகுதியினர் கடும் எதிர்ப்புக்கும் மத்தியில் தொழிற்சாலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இந்த குவாரியிலிருந்து வெளியேறும் புகை சுற்றிலும் ஒருகிலோ மீட்டர் தொலைவிற்கு வெள்ளை போர்த்தியது போல் விவசாய பயிர்களை ஆக்கிரமித்து விடுகின்றன.

மேலும் கல்குவாரியில் வைக்கப்படும் வெடி அதிக சப்தத்தை எழுப்புவதாலும், அதிகஅளவிலான தூசியாலும் இதுவரை 3 மாடுகள் உயிரிழந்திருப்பதாகவும் ஒன்னப்பள்ளி கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

தனியார் கல்குவாரியின் தூசி கழிவுகளால் விவசாயம் முற்றிலும் அழிந்து கடன் பிரச்சினைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் இதுகுறித்து கல்குவாரி நிர்வாகத்தினரிடம் தெரிவித்தபோது போலிசை கொண்டு மிரட்டுவதாகவும்

பலமுறை மாசுக்கட்டுப்பாட்டு அதிகரிகள் பார்வையிட்டும், கல்குவாரி நிர்வாகம் பணிகளை குறைத்து, வெளியேற்றும் கழிவுகளை தடுக்கும் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து பணிகளை அதிகரித்தே வருவதாகவும்
ஓசூர் அருகே விவசாய நிலங்களை பாழ்படுத்தி வரும் கல்குவாரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுத்து கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டுமென வன்னப்பள்ளி கிராமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.