கிருஷ்ணகிரி அருகே சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கல் தோப்பு தர்கா உள்ளது. இந்த தர்காவில் மக்கள் பங்களிப்புடன் தர்கா புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதனை கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தர்காவின் தரைதளத் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
அப்போது சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தர்காவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மைசூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஜாதி மத பேதமின்றி மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அவர்கள் வந்து செல்வதற்கு போதிய வசதி மற்றும் தெரு விளக்குகள் இன்றி மக்கள் மிகவும் அவதிப்படுவதால் இந்த தர்காவிற்கு உரிய சாலை வசதிகளையும் செய்து கொடுக்க வலியுறுத்தி தர்கா கமிட்டி சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தர்காவிற்கு விரைவில் தெருவிளக்கு வசதியுடன் சாலை அமைத்து கொடுப்பதாக செல்லக்குமார் உறுதி அளித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பிரிவு மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் சுப்பிரமணி, மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் முபாரக், தர்கா கமிட்டித் தலைவர் சையத்ரஷீர் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் உடனிருந்தனர்.
இதையும் படியுங்க: நாகூர் தர்காவின் அறங்காவலர் நியமன பிரச்னை - சமரசமாக முடித்து வைத்த உயர் நீதிமன்றம்