கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் மாட்டுப்பொங்கலைக் கொண்டாடும் விதமாக மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக சவூளுர், திம்மாபுரம், நெடுங்கல், போச்சம்பள்ளி, மலையாண்டஹள்ளி, தளி, ஹள்ளி என பல்வேறு கிராமங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.
இதைத் தொடர்ந்து, நகரின் மையப்பகுதியில் அனைத்து காளைகளையும் ஒவ்வென்றாக பொதுமக்கள் மத்தியில் அவிழ்த்துவிடப்பட்டது. சீறிப் பாய்ந்த காளைகளைக் கண்ட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: ராட்சத ஹீலியம் பலூனில் காவலன் செயலி விழிப்புணர்வு