ETV Bharat / state

'நிலம் எங்கள் உரிமை... இல்லையேல் தீ குளிப்போம்' - பொதுமக்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளியில் சிப்காட் என்ற பெயரில் தனியார் கம்பெனிகளுக்கு, விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி, 500க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest
author img

By

Published : Feb 26, 2020, 10:02 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம், குருபரப்பள்ளி பகுதியானது, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்க 250 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த விவசாயிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதனால், அங்குள்ள குருபரப்பள்ளி, எண்ணே கொல்புதூர் உள்ளிட்ட ஆறு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து குருபரப்பள்ளி தனியார் கம்பெனி அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், "அரசு கையகப்படுத்தும் 250 ஏக்கர் நிலத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கிணறு வெட்டி, ஆழ்துளைக்கிணறு அமைத்து மா, தென்னை, தேக்கு போன்ற மரங்களை வைத்து பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு நிலம் தேவைக்காக, எங்கள் வாழ்வு ஆதாரமான நிலங்களை கையகப்படுத்த அரசு சிப்காட் மூலமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

நிலத்தை மீட்க போராடும் மக்கள்

அரசு திட்டமிட்டு குருபரப்பள்ளி சுற்றுவட்டார விவசாய நிலங்களை கையகப்படுத்த கிராமத்தில் குடியிருக்கும் வீடுகளை இடிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள். எங்களின் வாழ்வு ஆதாரமாக விளங்கும் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என அரசுக்கு தெரிவிக்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறோம். இதற்கு அரசு செவிசாய்க்காவிட்டால் சாலைமறியல் போன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடத்துவோம். தீ குளிக்கவும் தயங்கமாட்டோம்" என்று எச்சரித்தனர்.

இதையும் படிங்க: 'முதலமைச்சருக்கு விவசாயம் தெரியும், ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?' - அமைச்சர் செங்கோட்டையன்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.