ETV Bharat / state

ஊரடங்கால் பாதித்த பனை தொழில்: வறுமையின் பிடியில் தொழிலாளர்கள்! - Krishnagiri palm farmers

கிருஷ்ணகிரி: கரோனா ஊரடங்கினால், போதிய போக்குவரத்து இல்லாததால் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட பனைவெல்லம் தேக்கமடைந்துள்ளது.

கிருஷ்ணகிரி  பனம்வெல்லம்  பனங்கருப்பட்டி  பனைத்தொழில்  Krishnagiri district news  Krishnagiri palm farmers  Krishnagiri palm farmers issue
ஊரடங்கால் பாதித்த பனைத்தொழில்: வறுமையின் பிடியில் பனைத் தொழிலாளர்கள்
author img

By

Published : May 15, 2020, 4:17 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை ஊத்தங்கரை, கல்லாவி, போச்சம்பள்ளி, திப்பனூர், களர்பதி, மலையாண்டள்ளி, சோனாரள்ளி, ஆனந்தூர், திருவணப்பட்டி, மத்தூர், சானிப்பட்டி, கவுண்டனூர், புளியாண்டப்பட்டி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன.

இப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் பனை சார்ந்த தொழில்களையே நம்பி வாழ்ந்து வருகிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை சீசன் என்பதால், பனை சார்ந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் சீசன் இல்லாத காலங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு வேலைக்குச் சென்றுவிடுவார்கள்.

தற்போது பனை சீசன் தொடங்கியுள்ளதால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி பனைவெல்ல உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக இந்த மாதத்தில், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வந்து கிருஷ்ணகிரி பகுதியில் செய்யப்படும் பனை வெல்லத்தை வாங்கிச் செல்வார்கள்.

ஊரடங்கால் பாதித்த பனை தொழில்: வறுமையின் பிடியில் தொழிலாளர்கள்

தற்போதைய ஊரடங்கினால், போக்குவரத்து வசதியில்லாததால் வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால், உற்பத்தி செய்யப்பட்டுள்ள பனை வெல்லம் தேக்கமடைந்துள்ளன. கடந்த ஆண்டைக்காட்டிலும் பனை வெல்ல உற்பத்தி பன்மடங்கு குறைந்துள்ளது.

இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. நுங்கு, பதநீர் விற்பனை மூலம் வருவாய் ஈட்டலாம் என நினைத்தாலும் தடை உத்தரவு காரணமாக அதனையும் செய்யமுடியாமல் சிரமப்படுகின்றனர். பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தும் பனை வெல்லம் நாட்டு மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

இத்தொழிலை மேம்படுத்தவும், இத்தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரத்தையும் காக்கவும் தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டங்களை கொண்டு வரவேண்டும் என்பதே பனை தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் தவிக்கும் தி.மலை தமிழர்கள்: ஆட்சியரிடம் மீட்க கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.