ETV Bharat / state

ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்!

கிருஷ்ணகிரி: குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

protest
protest
author img

By

Published : Aug 19, 2020, 9:22 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் மாரண்டஅள்ளி. இந்தக் கிராமத்திற்கு கடந்த 25 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

krishnagiri marandahalli village people road roko for water scarcity
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தைக்கு மக்கள் உடன்படிக்கை

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதாகவும் கிராமத்தில் பழுதாகி உள்ள ஆழ்துளை கிணறுகளை சீரமைப்பதாகவும் உறுதியளித்தார்.

இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: குடிநீர் வசதி கேட்டு ஜோலார்பேட்டையில் ஒரு குடும்பமே தீக்குளிக்க முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.