ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் விரைவு மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை - உள்ளாட்சி தேர்தல் 2019

கிருஷ்ணகிரி: 10 இடங்களில் 534 விரைவு மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றுவருகிறது.

Local body election 2019
krishnagiri-local-body-election
author img

By

Published : Jan 3, 2020, 10:07 AM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதில் 23 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 219 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 326 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள், இரண்டாயிரத்து 221 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்கட்டமாகத் தேர்தல் நடந்த ஓசூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மத்தூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், தளி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை தளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஊத்தங்கரை ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகின்றன.

இதே போல், பர்கூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியிலும், கெலமங்கலம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், சூளகிரி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்பட்டுவருகின்றன.

விரைவு மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை

தருமபுரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களுக்கு ஊராக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது, தருமபுரி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பதிவான வாக்குகள் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையம் குறித்த முறையான அறிவிப்புகள் அறிவிக்காத காரணத்தால் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் குளறுபடியால் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது.

இதையும் படிக்க: நாட்டுக்கு எதிரானது அல்ல, உங்களுக்கெதிரான போராட்டம்: நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் பதில்

Intro:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 10 இடங்களில் 534 விரைவு மேசைகள், 1042 வாக்கு எண்ணும் மேசைகள் அமைக்கப் பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது.Body:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 10 இடங்களில் 534 விரைவு மேசைகள், 1042 வாக்கு எண்ணும் மேசைகள் அமைக்கப் பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதில் 23 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 219 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், 326 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள், 2221 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டியை மூடி, முத்திரையிட்டு, அந்தந்த ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு வாக்குப்பெட்டிகளை வைத்து, அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடந்த ஓசூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை ஒசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மத்தூர் ஒன்றியய்தில் பதிவான வாக்குகளை மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், தளி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை தளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஊத்தங்கரை ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகிறது.
இதே போல், பர்கூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியிலும், கெலமங்கலம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், சூளகிரி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகிறது.
இன்று காலை 8 மணி முதல் 10 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணிக்கை தொடங்கி, நடைபெற்று வருகிறது.இதற்காக 534 விரைவு மேசைகள், 1042 வாக்கு எண்ணும் மேசைகள் அமைக்கப் பட்டு தலா ஒரு மேசைக்கு ஒரு அதிகாரி வீதம் நியமிக்கப் பட்டு, அனுமதிக்கபட்ட முகவர்கள் முன்னிலையில், வாக்கு பெட்டிகள் திறக்கப்பட்டு, தபால் வாக்குகள், பிறகு வாக்கு சீட்டுகளை எண்ண தொடங்கி, முடிவுகள் அறிவிக்கப் பட்டு வருகிறது.
தற்பொழுது வரை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 221 வார்டுகளில் 2 வார்டுகளில் அன் ஆப்போசிட் எனப்படும் எதிர் போட்டியாளர் இல்லாத காரணத்தினால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் மீதமுள்ள 219 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது தொடர்ந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி 10 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகமும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் என 15 இடங்களில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வார்டு உறுப்பினர் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது தற்போது வரை எவ்வித முடிவும் அறிவிக்கப்படவில்லை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.