ETV Bharat / state

மக்கள் வெள்ளத்தில் மிதந்த மரகதாம்பிகை!

கிருஷ்ணகிரி: ஓசூரில் பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஷ்வரர் கோயில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

மக்கள் வெள்ளத்தில் மிதந்த மரகதாம்பிகை
மக்கள் வெள்ளத்தில் மிதந்த மரகதாம்பிகை
author img

By

Published : Mar 9, 2020, 10:05 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஷ்வரர் தேர்த்திருவிழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரபாகர், ஓசூர் கோட்டாட்சியர் குமரேசன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவில் கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.

'ஓசூர் மலைக்கோயில்' என்றழைக்கப்படும் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஷ்வரர் திருக்கோயில் தேர்த்திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் சந்திரசூடேஷ்வரர் மற்றும் மரகதாம்பிகை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

மார்ச் 5-ஆம் தேதியன்று மலையிலிருந்து இறங்கிய உற்சவ மூர்த்திகள், தினந்தோறும் சிம்ம வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்டவைகளில் அமர்ந்து பக்தர்களுக்குத் தரிசனம் அளித்தனர்.

மக்கள் வெள்ளத்தில் மிதந்த மரகதாம்பிகை

இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனையடுத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 'அரோகரா' என விண்ணைப் பிளக்கும் அளவிற்கு கோஷம் எழுப்பியவாறு பக்தர்கள் தேரை இழுத்தனர்.

இத்தேரானது நான்கு முக்கிய வீதிகளில் சுற்றி வலம் வந்தது. இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் உப்பு, பழம், மிளகு போன்றவற்றை சாமியின் மீது வீசியெறிந்து, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். திருவிழாவை முன்னிட்டு ஓசூர் நகரம் முழுவதும் அன்னதானம், மோர், பழ ரசங்கள் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானம், மோர்

திருவிழாவிற்காக உள்ளூர் விடுமுறை விடப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருவிழாவில் அசாம்பாவிதங்களை தவிர்க்க ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கு தலைமையில் ஓசூர், சூளகிரி, பாகலூர் உள்ளிட்ட காவல்நிலையங்களைச் சேர்ந்த 100க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மலையைத் தாண்டும் விலை - கொரோனாவால் தட்டுப்பாடு...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.