கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை ஒன்பதாம் வகுப்பிற்கு நடைபெறவுள்ள அரையாண்டு தேர்வு தமிழ் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகியுள்ளது என வாட்ஸ் அப் குழுக்களில் வரும் தகவல் பரவிருகிறது. முன்னதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது.
தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் ஒரே தேர்வாக அனைத்து தேர்வுகளும் நடத்தபடுவதால் ஒரே ஒரு வினாத்தாள் தயார் செய்து அதனை மாநிலம் முழுவதும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது. இதையடுத்து, வினாத்தாள் அச்சடிக்கப்பட்டு தேர்வுக்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும். இதன் முழு பொறுப்பும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரையே சாரும்.
ஆனால் இன்று வாட்ஸ் அப் குழுக்களில் நாளை தமிழ்நாடு முழுவதும் நடக்கவுள்ள அரையாண்டு தேர்வு ஒன்பதாம் வகுப்பு தமிழ் வினாத்தாள் வாட்ஸ் அப் குழுக்களில் உலாவி வருகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகனை தொடர்பு கொண்டு கேட்ட போது நாளை தேர்வுக்கான வினாத்தாள் நாளை காலையில் மட்டுமே மாணவர்களின் கைகளில் வழங்கப்படும், வாட்ஸ் அப் குழுக்களில் உலா வரும் வினாதாள் முற்றிலும் தவறானவை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:
முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவிய உலகச் சாம்பியன் பி.வி. சிந்து!