ETV Bharat / state

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரி கின்னஸ் சாதனை!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நூறு விழுக்காடு வாக்களிப்பதின் அவசியம் குறித்து கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கின்னஸ் சாதனை கிடைத்துள்ளது.

Krishnagiri Government Arts College for Women guinnes award won
author img

By

Published : Sep 1, 2019, 10:07 AM IST

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி மற்றும் ஜே.சி.ஐ கிருஷ்ணகிரி மேங்கோ டவுன் இணைந்து 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்கள் இந்தியதேர்தல் ஆணைய குறியீட்டை மூவர்ணக்கொடி வர்ணத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அணிவகுத்து நின்றனர்.

பின்பு இந்நிகழ்ச்சி குறித்து ஜே.சி,ஐ. சார்பாக கின்னஸ் சாதனை விருதிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சாதனை உறுதி செய்யப்பட்டு அதற்கான சான்று கல்லூரிக்கு வழங்கப்பட்டது. அச்சான்றிழை நேற்று மாவட்ட ஆட்சியர் கல்லூரிக்கு வழங்கினார். பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர், இந்த சாதனைகளை நிகழ்த்திய கல்லூரி முதல்வர்,பேராசிரியர்கள் மற்றும் மாணவியருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Krishnagiri Government Arts College for Women guinnes award won
விருதுசான்றிதழை கல்லூரிக்கு வழங்கும் மாவட்ட ஆட்சியர்

இது போல பல சாதனைகளை இக்கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தி கல்லூரிக்கு பெருமைசேர்க்க வேண்டும்.மேலும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரி செய்யும் பணியை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொள்ள உள்ளார்கள்.

இந்தப்பணிகள் குறித்து பொதுமக்களிடம் மாணவர்கள் எடுத்துரைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Intro: 100 - சதவிகிதம் வாக்களிப்பதின் அவசியத்தை சமூகத்திற்கு உணர்த்தும்வகையில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரி முதல்வர், மற்றும் பேராசிரியர்களின்
ஒருங்கிணைப்பு கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரிக்கு கின்னஸ் சாதனை விருது Body:

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் , ஜே.சி.ஐ. கிருஷ்ணகிரி மேங்கோ டவுன்
மற்றும் கல்லூரி இணைந்து (அசிஸ்ட் வேர்ல்டு ரிகார்டு)துணை உலக சாதனை
பெற்றமைக்காக சான்றழிப்பு விழா மாவட்ட ஆட்சியர்
தலைமையில் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் விருது சான்றிதழை கல்லூரிக்கு வழங்கி பேசும்
போது:
கடந்த நாடாளுமன்ற தேர்தல் 2019- யொட்டி இக்கல்லூரி வளாகத்தில் 9.4.2019 அன்று
100 சதவிகிதம் வாக்களிப்பதின் அவசியத்தை சமூகத்திற்கு உணர்த்தும் வகையில் இக்கல்லூரி
முதல்வர், மற்றும் பேராசிரியர்களின் ஒருங்கிணைப்பில் மாணவியர்கள் இந்திய தேர்தல் ஆணைய
குறியீட்டை மூவர்ணக் கொடி வர்ணத்தில் எனது தலைமையில் ( மாவட்ட ஆட்சியர்) அணிவகுத்து நின்றனர். பின்பு இந்நிகழ்ச்சி குறித்து ஜே.சி.ஐ. சார்பாக
கின்னஸ் சாதனை விருதிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அச்சாதனை உறுதி செய்யப்பட்டு
அதற்கான சான்று கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய கல்லுரி முதல்வர்,
பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் மேலும் இக்கல்லூரி மாணவியர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இக்கல்லூரி
பெருமை சேர்த்திட வேண்டும். அதேபோல நல்ல கல்வி கற்று சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்று
தங்களின் வாழ்க்கை சிறப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேசினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கும் போது : செப்டம்பர் 1ம் தேதி முதல்
30ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் வீடு வீடாக வாக்காளர் பட்டியல்
சரிசெய்யும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொள்ள உள்ளார்கள்.
வாக்காளர்கள் தங்களுடைய புகைப்படம்பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட
திருத்தங்களை செய்துகொள்ளலாம். மாணவியர்கள் இந்த பணிகள் குறித்து பொதுமக்களிடம்
எடுத்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மு.சேகர் அவர்கள்
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.