ETV Bharat / state

வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்த கிருஷ்ணகிரி ஆட்சியர்

author img

By

Published : Sep 17, 2020, 10:40 PM IST

கிருஷ்ணகிரி: கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலம், கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்

கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாளர்கள் விவரம், பதிவேடுகள், கோப்புகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விபத்து நிவாரண உதவித் தொகை வழங்கிய விவரங்கள் மற்றும் நிலுவையில் உள்ள விவரங்கள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் ராயக்கோட்டை சாலை முதல் இந்திரா நகர் வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 13 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை பணிகளையும், ராயக்கோட்டை சாலை முதல் தின்னகழனி கிராமம் வரை புதியதாக அமைக்கப்பட்டுள்ள மண் சாலை பணிகள், கங்கலேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுற்று சுவர் பணிகள், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு எடை அளவு பரிசோதனை செய்யும் கருவி, மற்றும் திட்ட விளக்க பதிவேடுகள், வெப்பாலம்பட்டி கூட்ரோடு பகுதியில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யும் பகுதியில் பொது நீர் உறிஞ்சி குழி பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

மேலும் பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். அதே பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டட கட்டுமான பணிகளையும், பூதிப்பட்டி கிராமத்தில் சிமெண்ட் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும் ஆலப்பட்டி ஊராட்சியில் நீர் வரத்து செல்லக்கூடிய பகுதியில் சிமெண்ட கான்கிரீட் தடுப்பணை அமைத்து, கால்வாய் ஆழப்படுத்தப்பட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.