ETV Bharat / state

ஆயிரம் பிரசாந்த் கிஷோர்கள் வந்தாலும் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை - நரேந்திரன்

author img

By

Published : Feb 17, 2020, 11:10 PM IST

கிருஷ்ணகிரி: எத்தனை பிரசாந்த் கிஷோர்கள் வந்தாலும் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்த முடியாது என பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் தெரிவித்துள்ளார்.

narendran
narendran

பாஜகவின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் விடுதி கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் நரேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

”தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற சதி நடப்பதாக தெரிகிறது. சென்னை வண்ணாரப்பேட்டைடையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறி அதில் காவல் துறை துணை ஆணையர் உள்ளிட்ட ஏராளமானோர் தாக்கப்பட்டுள்ளனர். இதில், திமுகவும் அதன் தலைவரும் தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற நினைக்கின்றனர்.

திமுகவை விமர்சித்து பேசும் நரேந்திரன்

இதை திமுக தலைவர் நினைக்கிறாரோ? அல்லது புதிதாக தமிழ்நாடு வந்த பிரசாந்த் கிஷோர் நினைக்கிறாரோ? தெரியவில்லை. எத்தனை ஆயிரம் பிரசாந்த் கிஷோர்கள் வந்தாலும் தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றமுடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: 'வண்ணாரப்பேட்டை போராட்டத்திற்கு தடைகோரிய வழக்கு: அவசர வழக்காக எடுக்க முடியாது' - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.