கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நோய்த்தடுப்பு குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆட்சியா் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மைச் செயலருமான டாக்டர் பீலா ராஜேஷ் கலந்துகொண்டார். கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் 190 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையம், தடுப்பூசி மையம் ஆகியவற்றை அவர் அப்போது பார்வையிட்டு ஆய்வுசெய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவா்களுக்கு தனியாக விழிப்புணா்வு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அறிவுரைகளைக் கடைபிடித்தால் நிறுவனத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்ப்பட்டால்கூட நிறுவனத்தை மூடாமல் தொற்று பாதிக்கப்பட்ட நபா்களின் தொடா்பில் இருந்தவா்களை மட்டும் தனிமைப்படுத்தினால் போதும்” என்றார்.
இதையும் படிங்க: கரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் திருமணத்துக்கு வாங்க - தம்பதிக்குப் பாராட்டு