ETV Bharat / state

சூளகிரி அதிமுகவில் உட்கட்சி பூசல் - கே.பி. முனுசாமிக்கு எதிராக மாவட்ட அதிமுகவினர் - krishnagiri district news

கிருஷ்ணகிரி: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, கட்சி விதிகளை காற்றில் பறக்கவிட்டு கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களுடன் கூட்டு சேர்ந்து கட்சியை அழிக்கும் நோக்கில் செயல்படுவதாக கிருஷ்ணகிரி அதிமுகவினர் பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

சூளகிரி அதிமுக  துணை செயலாளர் கேபி முனுசாமி  கிருஷ்ணகிரி மாவட்டச் செய்திகள்  சூளகிரி அதிமுக உட்கட்சி பூசல்  krishnagiri district news  krishnagiri admk
சூளகிரி அதிமுகவில் வெடித்தது உட்கட்சி பூசல் கே.பி. முனுசாமிக்கு எதிராக உள்ள மாவட்ட அதிமுகவினர்
author img

By

Published : Aug 25, 2020, 10:37 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அதிமுக முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், 1,000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்குபெற்றனர். இதில், சூளகிரி அதிமுக கிழக்கு ஒன்றியத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் கட்சிக்கு எதிராக செயல்படுவதாக எழுந்த புகார்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரபாகரன், "தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி. முனுசாமி கட்சி விதிகளை காற்றில் பறக்கவிட்டு கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை கட்சியில் சேர்த்து கட்சியை அழிக்கும் நோக்கில் செயல்படுகிறார். இதைக் கட்சித் தலைமைக்கு கொண்டு செல்லும் விதமாக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில், கட்சித்தலைமை தலையிட்டு உரிய தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டம் நடத்தியது கட்சி தலைமைக்கோ அல்லது கட்சிக்கு எதிரான நடவடிக்கையோ இல்லை. கட்சிக்கு எதிரான நிர்வாகிகளின் செயல்பாட்டை கண்டிக்கும் விதமாக நடைபெற்ற கூட்டம்தான் இது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: முதலமைச்சரிடம் ஆசிபெற்ற அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.