கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த ஒன்னல்வாடி கிராமத்தின் வழியே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த குடிநீர் குழாயில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ஆறாக பெருக்கெடுத்து சாலையில் ஒடியது. இதைப்பார்த்த பொதுமக்கள் அரசு அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த அலுவலர்கள் குடிநீர் வீணாவதை நிறுத்தினர்.
கோடை மற்றும் வறட்சி காலத்தில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் சாலையோரத்தில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது அப்பகுதி பொதுமக்களை மட்டுமல்லாது சாலையில் சென்ற பொதுமக்களையும் வேதனைப்படுத்தியது.