ETV Bharat / state

மாணவர்களை குதிரையில் அமரவைத்து அழைத்து வந்து மரியாதை செலுத்திய பள்ளி - ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி

கிருஷ்ணகிரி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர் சேர்க்கை பேரணி இன்று நடைபெற்றது. புதிதாக சேர்ந்த மாணவர்களை குதிரையில் அமரவைத்து அழைத்து வந்து பள்ளி நிர்வாகம் மரியாதை செலுத்தியது.

மாணவர் சேர்க்கை பேரணி
author img

By

Published : Apr 7, 2019, 3:01 PM IST

கிருஷ்ணகிரி அருகே உள்ள மோட்டூர் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளியில், வருகிற கல்வி ஆண்டில் ஐந்து வயதுக்கு உட்பட்ட பள்ளி குழந்தைகளை கட்டாயம் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியின்போது, பள்ளி வயது குழந்தைகளை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, புதியதாக சேர்ந்த மணவர்களை பள்ளி ஆசிரியர் குதிரையில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் இந்த விழாவில், மோட்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு பள்ளிக்கு தேவையான பொருட்களை, சீர் வரிசையாக எடுத்துவந்தனர்.

முன்னதாக மோட்டூர் கூட்டு ரோட்டிலிருந்து பீரோ, மின்விசிறி, டேபிள்கள், நாற்காலிகள், ரேடியோ செட், மைக்செட், டிவிடி பிளேயர், விளையாட்டு உபகரணங்கள், பாய்கள், எழுதுகோல் உள்ளிட்ட சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான கல்வி சீர்வரிசைப்பொருட்களை மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்த கிராம மக்கள், பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் பள்ளி மேம்பாட்டுக்காக பள்ளிக்கு தேவையான கல்வி சீர்வரிசைப் பொருட்களை வழங்கிய கிராம மக்களுக்கு, பள்ளியின் சார்பில் நன்றிகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.

மாணவர்களை குதிரையில் அமரவைத்து அழைத்து வந்து மரியாதை செலுத்திய பள்ளி

கிருஷ்ணகிரி அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தீவிர மாணவர் சேர்க்கை பேரணியில், புதியதாக சேர்ந்த மாணவர்களை குதிரையில் அமரவைத்து அழைத்து வந்து மரியாதை செலுத்திய பள்ளி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள மோட்டூர் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளியில், புதியதாக மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி மற்றும் இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு  தேவையான கல்விச்சீர் வரிசைப்பொருட்கள் வழங்கும்  விழா மற்றும் வரும் கல்வி ஆண்டில்  5 வயதுக்கு உட்பட்ட பள்ளி குழந்தைகளை கட்டாயம் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியின் போது, பள்ளி வயது குழந்தைகளை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, புதியதாக சேர்ந்த மணவர்களை பள்ளி ஆசிரியர் குதிரையில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்து மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் இந்த விழாவில், மோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த முன்னால் மாணவர்களும், பொதுமக்களும் கலந்துக்கொண்டு பள்ளிக்கு தேவையான பொருட்களை, சீர் வரிசையாக எடுத்துவந்தனர்.
முன்னதாக மோட்டூர் கூட்டு ரோட்டிலிருந்து பீரோ, மின்விசிறி, டேபிள்கள், நாற்காலிகள், ரேடியோ செட், மைக்செட்,  டிவிடி பிளேயர், விளையாட்டு உபகரணங்கள், பாய்கள், எழுதுகோல் உள்ளிட்ட சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான கல்வி சீர்வரிசைப்பொருட்களை மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்த கிராம மக்கள், பள்ளி தலைமை ஆசிரியரிடம்  ஒப்படைத்தனர்.
பின்னர் பள்ளி மேம்பாட்டுக்காக கிராம மக்கள் ஒன்றிணைத்து பள்ளிக்கு தேவையான கல்வி சீர்வரிசைப்பொருட்களை வழங்கிய கிராம மக்களுக்கு, பள்ளியின் சார்பில் நன்றியும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.

Visual on ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.