ETV Bharat / state

கெலவரப்பள்ளி அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றம்

author img

By

Published : Oct 31, 2019, 10:43 AM IST

கிருஷ்ணகிரி : கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி ஐந்து மதகுகள் வழியாக வினாடிக்கு 968 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Kelavarapalli dam capacity Kelavarapalli dam water level கெலவரப்பள்ளி அணை நீர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து நீர் வெளியேற்றம் கெலவரப்பள்ளி அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றம் அணையின் பாதுகாப்பு Kelavarapalli dam release water Considering the safety of the dam Kelavarapalli dam

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த சில தினங்களாக குறைந்து காணப்பட்டது. தற்போது தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைபெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது.

அதன்படி, அணையின் நீர்வர்த்து வினாடிக்கு 808 கன அடியிலிருந்து 968 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் தற்போது 41.66 அடி வரை நீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது.

கெலவரப்பள்ளி அணை

இந்தச்சூழலில் அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து ஐந்து மதகுகள் வழியாக 968 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், இரு தினங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அவ்வாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் வரக்கூடிய நீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : அரபிக்கடலில் உருவான 'மகா' புயல்! - நாளை தீவிரமாகிறது

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பு.Body:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பு.

5 மதகுகள் வழியாக 968 கன அடி நீர் வெளியேற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த சில தினங்களாக நீரின் வரத்து குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தென்பெண்ணை ஆற்றுநீர் பிடிப்பு பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்து வருவதால். இதன் காரணமாக ஓசூரில் உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து உள்ளது.
ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியில் தற்போது 41.66 அடிநீர் சேமிக்கப்பட்டுள்ளது, நேற்றுஅணைக்கு வினாடிக்கு 808 கன அடி தண்ணீர் வந்த நிலையில் தற்போது 160 கன அடியாக அதிகரித்து அணைக்கு வினாடிக்கு 968 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து 5 மதகுகளின் வழியாக 968கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது,
மேலும் இரு தினங்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், ஓசூர் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், மோரனப்பள்ளி, பாத்தகோட்டா, ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அதிகரிக்கும் பட்சத்தில் வரகுடிய தண்ணீரை அப்படியே ஆறில் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.