ETV Bharat / state

நீர் மேலாண்மை திட்ட முன்னேற்பாடுகளை கேட்டறிந்த மத்திய குழு!

கிருஷ்ணகிரி: தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் மேலாண்மை திட்ட முன்னேற்பாடு குறித்து, மத்திய குழுவினர் அனைத்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

jal sakthi
author img

By

Published : Aug 14, 2019, 9:22 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை குறித்து மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறைக்கான கூடுதல் செயலாளர் மாஹி தலைமையில், மனிதவள மேம்பாட்டு இயக்குநர் விஜயபாஸ்கர் குராலா, மாவட்ட ஆட்சியர் பிரபாகர், விஞ்ஞானிகள் ஆதிரா, மாதவ் ஆகியோர் கடந்த மாதம் முதல் வாரத்தில், நீர் நிலைகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரை வழங்கிச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு நடத்த மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறைக்கான கூடுதல் செயலர் மாஹி தலைமையில் நேற்று மீண்டும் வருகை தந்தனர்.

முன்னேற்பாட்டு பணிகளை கேட்டறிந்த மத்திய குழு!

பின்னர், அலுவலர்கள் கூட்டத்தில் பேசிய கூடுதல் செயலர் மாஹி, "அரசுப் பள்ளிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பணியாளர்களின் உதவியுடன் மரங்கள் நடும் பணியை அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டும். பயன்பாட்டில் இல்லாத கால்வாய்களை தூர்வாரி, அதன் மூலம் கிடைக்கப்பெறும் மழை நீரை, ஆழ்துளை கிணறுகள் மூலம் நிரப்பும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். தனியார் பங்களிப்புடன் ஏரி, குளம் தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அப்பணிகள் செம்மையாக செயல்படுத்தி, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். விரைவில் நிரந்தரமாக குடிநீர் பிரச்னை தீர்க்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து பல்வேறு விரைவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்று கூறினார்.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப் பட்டு வரும் நீர் மேலாண்மை திட்ட முன்னேற்பாட்டு பணிகளை மத்திய குழுவினர் அனைத்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.Body:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப் பட்டு வரும் நீர் மேலாண்மை திட்ட முன்னேற்பாட்டு பணிகளை மத்திய குழுவினர் அனைத்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை குறித்து மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறைக்கான கூடுதல் செயலாளர் மாஹி தலைமையில், மனிதவள மேம்பாட்டு இயக்குநர் விஜயபாஸ்கர் குராலா, மாவட்ட ஆட்சியர் பிரபாகர், விஞ்ஞானிகள் ஆதிரா, மாதவ் ஆகியோர் கடந்த மாதம் முதல் வாரத்தில், நீர் நிலைகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற் கொண்டனர். அப்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரை வழங்கி சென்றனர். இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப் பட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ள மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறைக்கான கூடுதல் செயலர் மாஹி தலைமையில் இன்று மீண்டும் வருகை தந்தனர். பின்னர் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய கூடுதல் செயலர் மாஹி, அரசு பள்ளிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பணியாளர்களின் உதவியுடன் மரங்கள் நடும் பணியினை எல்லா பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டும். பயன்பாட்டில் இல்லாத கால்வாய்களை தூர்வாரி, அதன் மூலம் கிடைக்கப் பெறும் மழை நீரிணை, ஆழ்துளை கிணறுகள் மூலம் நிரப்பும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். தனியார் பங்களிப்புடன் ஏரி குளம் தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்ற திட்டம் வகுக்கப் பட்டுள்ளது. அப் பணிகள் செம்மையாக செயல்படுத்தி, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தற்போது மேற்கொள்ளப் பட்டு வரும் தூர்வாரும் பணிகள் மூலம் பல்வேறு கிராமங்கள், நீண்ட கால தண்ணீர் பெறும் வகையில், சிறந்த பணிகளாகும். தொடர்ந்து குக் கிராமங்களில் தண்ணீர் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். நீண்ட கால திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. விரைவில் நிரந்தரமாக குடிநீர் பிரச்சினை தீர்க்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து பல்வேறு விரைவு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக வகுக்க படும் திட்டங்களை அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.
உடன் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி மற்றும் அனைத்து துறைகளின் அதிகாரிகள் இதில் கலந்துக் கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.