ETV Bharat / state

உழவர் திருவிழாவில் விவசாயிகளுக்குச் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கல்! - ஜல் சக்தி அபியான் உழவர் திருவிழா

கிருஷ்ணகிரி: நீர் ஆற்றல் (ஜல் சக்தி அபியான்) உழவர் திருவிழாவில் விவசாயிகளுக்கு பத்து லட்சம் மதிப்புள்ள சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கப்பட்டன.

Jal sakthi festival, Collector issued Irrigation equipment to Farmers
author img

By

Published : Sep 4, 2019, 2:04 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பையூர் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் நீர் ஆற்றல் உழவர் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர் தொடங்கிவைத்தார். அப்போது விவசாயிகளுக்கு 10 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொட்டுநீர் பாசன கருவிகளை ஆட்சியர் வழங்கினார்.

அப்போது பேசிய ஆட்சியர், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர் ஆற்றல் திட்டத்தின் மூலம் குழுக்கள் அமைத்து நீர் மேலாண்மை பணிகள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அதில், குடிமராமத்துப் பணிகள் திட்டத்தின் கீழ் இதுவரை 100 ஏரிகள் 325 குளம்
குட்டைகளை தூர்வாரும் பணி நடைபெற்றுவருகிறது.

மேலும், விவசாய நிலங்களுக்குப் பாசன நீரைப் பிரித்து வழங்கும் லஷ்கர் பணியாளர்கள் தற்காலிக பணி அடிப்படையில் நியமித்து அனைத்து பகுதிகளுக்கும் நீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பையூர் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் நீர் ஆற்றல் உழவர் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர் தொடங்கிவைத்தார். அப்போது விவசாயிகளுக்கு 10 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொட்டுநீர் பாசன கருவிகளை ஆட்சியர் வழங்கினார்.

அப்போது பேசிய ஆட்சியர், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர் ஆற்றல் திட்டத்தின் மூலம் குழுக்கள் அமைத்து நீர் மேலாண்மை பணிகள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அதில், குடிமராமத்துப் பணிகள் திட்டத்தின் கீழ் இதுவரை 100 ஏரிகள் 325 குளம்
குட்டைகளை தூர்வாரும் பணி நடைபெற்றுவருகிறது.

மேலும், விவசாய நிலங்களுக்குப் பாசன நீரைப் பிரித்து வழங்கும் லஷ்கர் பணியாளர்கள் தற்காலிக பணி அடிப்படையில் நியமித்து அனைத்து பகுதிகளுக்கும் நீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பையூர் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையத்தில்இ வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் ஜல் சக்தி அபியான் உழவர் திருவிழா ஆட்சியர் துவக்கி வைத்து விவசாய பெருமக்களுக்கு ரூ. 10 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கல்.
Body:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பையூர் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையத்தில்இ வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் ஜல் சக்தி அபியான் உழவர் திருவிழா ஆட்சியர் துவக்கி வைத்து விவசாய பெருமக்களுக்கு ரூ. 10 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கல்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஆட்சியர் உரையாற்றும் போது: உரையாற்றும்போது நாடு முழுவதும் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் மூலம் குழுக்கள் அமைத்து நீர் மேலாண்மை பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள்
திட்டத்தின் கீழ் இதுவரை 100 ஏரிகள் தலா ரூ. 5 – லட்சம் மதிப்பில் தூர் வாரும் பணிகளும், 325 குளம்
குட்டைகள் தலா ரூ. 1 –லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர் வாரும் பணிகளும், மாவட்டம்
முழுவதும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், நகர தொண்டு நிறுவனங்கள், குடியிருப்பு நல சங்கங்கள்,
மூலம் 150 – ஏரிகள் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் தூர் வாரும் பணிகள் என மொத்தம் 575 -
ஏரிகள் மற்றும் குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
95 சதவிகித ஏரிகளில் பணிகள் துவக்கப்பட்டு முழுவீச்சில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று
வருகிறது. மதகுகள் சீர் செய்யும் பணிகள், நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் நீர் வெளியேற்று கால்வாய்கள்
தூர் வாரும் பணிகள், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், ஏரிகளின் சுற்றிலும் நில அளவை செய்து கல்கம்பம் நடும்
பணியில் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 2016-
17 – நிதியாண்டில் பொதுபணித்துறையின் மூலம் நிதி ஓதுக்கீடு செய்து குடிமராமத்து பணி மேற்கொள்ள
வேண்டிய கால்வாய்கள், ஏரிகள், மழை மற்றும் தண்ணீர் தேங்கிய காரணத்தால் தூர் வாரும் பணிகள்
மேற்கொள்ள இயலவில்லை. தற்போது அந்த பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டது. ஓசூரில் நகர பகுதியில் உள்ள
17 –ஏரிகள் கண்டறியப்பட்டு அதில் 11- ஏரிகள் சிறப்பாக தூர் வாரி குப்பைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள்
செய்யதா வகையில் ஏரி குளங்களை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. சிப்காட் தொழிற்சாலை பகுதியில்
அரசுக்கு சொந்தமான 12- ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு அந்த இடத்தில் புதியதாக ஒரு ஏரி
உருவாக்கப்பட்டது. கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக ஏரியில் தண்ணீர் தேங்கியுள்ளது.
குடிமராமத்து திட்டம் நடைபெறும் ஏரிகளில் ஊரக வளர்ச்சித்துறை, பணி மேற்பார்வையாளர்கள்,
பொறியாளர்கள், தலைமையிலான குழுவினர் திட்டம் மதீப்பீடு செய்து அதற்கு நிதி ஒதுக்கீடு செய்த பிறகு
ஏரிகளில் தற்போதிய நிலை, பணி ஆரம்பித்த பிறகு நாள்தோறும் நடைபெறும் பணிகளை இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யப்படுகிறது. தினந்தோறும் அரசு செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர், மாவட்ட
ஆட்சித்தலைவர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆகியோர் நேரடியாக பணிகளை
பார்வையிடுகின்றனர். ஏரிகளில் தினந்தோறும் எத்தனை இயந்திரம், வேலை செய்கிறது, எவ்வளவு மண்
அள்ளப்படுகிறது, என்பதை அளவீடு செய்யப்படுகிறது. பொதுமக்களும் விவசாயிகளும் இந்த திட்டத்திற்கு
முழு ஒத்துழைப்பு கொடுத்து எதிர்கால சந்ததியினர் பயன்பெற நீர்; நிலைகளை பாதுகாக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன திட்டம் மற்றும் விவசாய துறையில் பல்வேறு சலுகைகள் பெற நில
உரிமை சான்று சிறு விவசாய சான்று பெறுவதில் சிக்கல் இருப்பதாக மக்கள் பிரதிநிதிகளும், விவசாயிகளும்
கோரிக்கை வைத்துள்ளீர்கள். அனுபவத்தின் அடிப்படையில் கூட்டு குடும்ப சொத்துகளுக்கு உரிமை சான்று
வழங்கப்படும். நிலத்தில் பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கும் பட்சத்தில் சட்டப்படி உதவி செய்ய இயலாது.
மேலும் விவசாய நிலங்களுக்கு பாசன நீரை பிரித்து வழங்கும் லஷ்கர் பணியாளர்கள் தற்காலிக பணி
அடிப்படையில் நியமித்து அனைத்து பகுதிக்கும் நீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பேசினார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.