ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு!

கிருஷ்ணகிரி: உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைத்துள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, வாக்கும் எண்ணும் மையம், வாக்குப் பதிவு மையங்களை தேர்தல் பார்வையாளர் .டி. ஆப்ரகாம், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.சு.பிரபாகர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

inspection by election officers
தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு
author img

By

Published : Dec 20, 2019, 1:16 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் வருகிற டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களையும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், பதிவேடுகளையும் தேர்தல் பார்வையாளர் டி.ஆப்ரகாம் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், புகார் தெரிவித்த சம்பந்தப்பட்ட புகார்தாரரிடம் கைப்பேசியில் தொடர்பு கொண்டு விசாரிக்கவும் செய்தார். பின்னர் பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் எண்ணும் மையமான பர்கூர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் பணிகள் , ஒரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.சு.பிரபாகருடன் சேர்ந்து தேர்தல் பார்வையாளர் டி. ஆப்ரகாம் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பார்வையாளர் டி. ஆப்ரகாம் , ' கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27.12.2019 அன்று தளி, ஓசூர் காவேரிப்பட்டிணம், மத்தூர், ஊத்தங்கரை ஆகிய 5 ஒன்றியங்களில் முதற் கட்டமாகவும், 30.12.2019 அன்று கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனஹள்ளி, சூளகிரி, கெலமங்கலம் ஆகிய 5- ஒன்றியங்களில் இரண்டாம் கட்டமாகவும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 04343-233333 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

மேலும் தேர்தல் சம்மந்தமாக புகார்கள் தேர்தல் பார்வையாளர் கைப்பேசி எண் 9940730706 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் அல்லது சூளகிரி பவர் கிரிட் மையத்தில் இயங்கி வரும் தேர்தல் பார்வையாளர் முகாம் அலுவலத்தில் அறை எண்: 3 ல் மாலை 5- மணி முதல் 6 மணி வரையும் நேரில் புகாரைத் தெரிவிக்கலாம்.

இதுவரை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 13 புகார்கள் வரப்பெற்றுள்ளன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

இதையும் படிங்க: அங்கன்வாடியில் புகுந்த பாம்பால் குழந்தைகள் அச்சம்!

Intro:
தேர்தல் கட்டுப்பாட்டு அறை, வாக்கும் எண்ணும் மையம், மற்றும் வாக்கு பதிவு மையங்களை தேர்தல் பார்வையாளர் திரு.டி.ஆப்ரகாம் இன்று நேரில்
பார்வையிட்டு ஆய்வு.Body:
தேர்தல் கட்டுப்பாட்டு அறை, வாக்கும் எண்ணும் மையம், மற்றும் வாக்கு பதிவு மையங்களை தேர்தல் பார்வையாளர் திரு.டி.ஆப்ரகாம் இன்று நேரில்
பார்வையிட்டு ஆய்வு.

உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக புகார்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 04343-233333 என்ற எண்ணிலும், தேர்தல் பார்வையாளர் கைபேசி எண் 9940730706 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தேர்தல் பார்வையாளர் அவர்கள் தகவல்.

உள்ளாட்சி தேர்தல் 2019- யொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரபெற்ற புகார்கள் அவற்றின் மீது எடுக்கப்பட்ட
நடவடிக்கைகள், பதிவேடுகளை தேர்தல் பார்வையாளர் திரு.டி.ஆப்ரகாம் பார்வையிட்டு புகார் தெரிவித்த சம்மந்தப்பட்ட புகார்தாரரிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு; விசாரித்தார். தொடர்ந்து பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் எண்ணும் மையமான பர்கூர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் ஒரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தேர்தல் பார்வையாளர் திரு.டி. ஆப்ரகாம் இ.ஆ.ப.
அவர்கள் , மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.சு.பிரபாகர் இ.ஆ.ப. ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்பு தேர்தல் பார்வையாளர் அவர்கள் தெரிவிக்கும் போது:
உள்ளாட்சி தேர்தல் 2019 – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27.12.2019 அன்று தளி, ஓசூர் காவேரிப்பட்டிணம், மத்தூர், ஊத்தங்கரை ஆகிய 5- ஒன்றியங்களில் முதற் கட்டமாகவும், 30.12.2019 அன்று கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனஅள்ளி, சூளகிரி, கெலமங்கலம் ஆகிய 5- ஒன்றியங்களில் இரண்டாம் கட்டமாகவும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 04343-233333 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும்
தேர்தல் சம்மந்தமாக புகார்கள் தேர்தல் பார்வையாளர் கைபேசி எண் 9940730706 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் சூளகிரி பவர் கிரிட் மையத்தில் இயங்கி வரும் தேர்தல் பார்வையாளர் முகாம் அலுவலத்தில் அறை எண்: 3 ல் மாலை 5- மணி முதல் 6- மணி வரை நேரில் புகாரை தெரிவிக்கலாம்.
இதுவரை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 13- புகார்கள் வரப்பெற்றுள்ளது. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கும் எண்ணும் மையமான பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில், வாக்கு எண்ணும் பணிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுற்று வாக்கு பெட்டிகள் வைக்கும் பாதுகாப்பு அறையில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேப்போல வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் மேசை அமைக்கும் பணிகள், பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்களுக்கான இருக்கைகள்
அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என தேர்தல் பார்வையாளர் அவர்கள் தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.