கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலக கழிவறைக்கு சென்ற தூய்மை பணியாளர்கள், அங்கு பெண்ணின் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்றையினர் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தேன்கனிக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை தாலுகா அரசகுப்பம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி, அவரது மனைவியுடன் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இதையடுத்து, நள்ளிரவு பொன்னுசாமி மது போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த பொன்னுசாமி அருகிலிருந்த அரிவாளைக் கொண்டு மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர், போதை தெளிந்தபின் அங்கிருந்து தலைமறைவாகி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் பொன்னுசாமியை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இலை அகன்று சூரியன் உதிக்கும்! - ஈடிவி பாரத் சர்வே முடிவுகள்!