ETV Bharat / state

ஓசூர் ஆர்டிஓ வாகன சோதனைச்சாவடியில் கட்டாய வசூல்: வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி: ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆர்டிஓ வாகன சோதனைச்சாவடியில் கனரக வாகனங்களிடம் கட்டாய வசூலில் அலுவலர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

TOLL GATE ISSUE  ஓசூர் ஆர்டிஓ வாகன சோதனைச் சாவடி விவகாரம்  கிருஷ்ணகிரி ஆர்டிஓ வாகன சோதனைச் சாவடி விவகாரம்  Hosur RTO Tollgate Issue  Krishnagiri RTO Tollgate Issue  RTO Tollgate Issue  ஆர்டிஓ வாகன சோதனைச் சாவடி விவகாரம்
RTO Tollgate Issue
author img

By

Published : Jan 8, 2020, 10:32 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லைப் பகுதியாக விளங்குவதால் ஓசூர் - பெங்களூரு செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிப்காட் பகுதியில் தமிழ்நாட்டின் ஆர்டிஓ வாகன சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கியச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஆர்டிஓ சோதனைச்சாவடியில் மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் வாடகை வாகனங்களுக்கு தற்காலிக பர்மிட்டுகள் கட்டணம் வசூலித்து வழங்கப்படுகிறது.

இவ்வாறு நாள்தோறும் வரும் வாகனங்களிடம் ஒவ்வொரு வாகனத்திற்கு 200 ரூபாய்முதல் 300 ரூபாய்வரை அலுவலர்கள் கட்டாயமாக வசூலிக்கப்படுவதாகவும் அவ்வாறு கொடுக்க மறுப்போரின் வாகனங்கள் கர்நாடகாவிற்கு அனுமதிக்கப்படுவதில்லை எனவும் லாரி ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தற்போது ஆர்டிஓ சோதனைச்சாவடியில் அலுவலர்கள் பணத்தைக் கேட்கும் காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து தகவல்களைச் சேகரிக்க சென்றபோது, வாகனங்களிடம் சோதனைச்சாவடியில் பணம் பெற்றுவருவது தெரியவந்தது. செய்தியாளர்களிடம் காணொலி குறித்து பதிலளிக்காமல் தவிர்த்துவிட்டனர்.

ஓசூர் ஆர்டிஓ வாகன சோதனைச்சாவடி

பின்னர் வந்த லாரிகளில் ஓட்டுநர்கள் பணம் வழங்க முயன்றபோது பணம் வாங்காமல் ஆவணங்களை மட்டும் சரிபார்த்து அனுப்பியது லாரி ஓட்டுநர்களையே ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது. இவ்வாறு தினந்தோறும் அதிகப்படியான ரூபாயை வசூலித்து, லாரி ஓட்டுநர்களைத் தரக்குறைவாக நடத்தும் அலுவலர்கள் மீது ஆர்டிஓ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

ரசாயன கழிவுகள் ஏற்றி வந்த லாரி தீ விபத்தில் நாசம்!

Intro:ஒசூர், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆர்டிஓ வாகன சோதனைச்சாவடியில் கனரக வாகனங்களிடம் கட்டாய வசூலில் அதிகாரிகள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
Body:ஒசூர், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆர்டிஓ வாகன சோதனைச்சாவடியில் கனரக வாகனங்களிடம் கட்டாய வசூலில் அதிகாரிகள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தமிழக - கர்நாடக மாநில எல்லையாக விளங்கி வருதால் ஒசூரிலிருந்து பெங்களூரு செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் பகுதியில் தமிழகத்தின் ஆர்டிஓ வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஆர்டிஒ சோதனைசாவடியில் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் வாடகை வாகனங்களுக்கு தற்காலிக பர்மிட்டுகளும் கட்டணம் வசூலித்து வழங்கப்படுகிறது

இவ்வாறு தினந்தோறும் வரும் வாகனங்களிடம் ஒவ்வொரு வாகனத்திற்கு 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதிகாரிகள் கட்டாயமாக வசூலிக்கப்படுவதாகவும் அவ்வாறு கொடுக்க மறுப்போரின் வாகனங்கள் கர்நாடகாவிற்கு அனுமதிக்கப்படுவதில்லை என லாரி ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு வைத்து, ஆர்டிஓ சோதனை சாவடியில் அதிகாரிகள் பணத்தை கேட்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்திய நிலையில்,

இதுக்குறித்து தகவல்களை சேகரிக்க சென்றபோது, வாகனங்களிடம் சோதனை சாவடியில் பணம் பெற்று வருவது தெரியவந்தது, நிருபர்களிடம் வீடியோ குறித்து பதிலளிக்காமல் தவிர்த்து விட்டனர்,

பின்னர் வந்த லாரிகளில் ஓட்டுநர்கள் பணம் வழங்க கைகளில் எடுத்து செல்லப்பட்டபோதும் பணம் வாங்கப்படாமல் ஆவணங்களை மட்டும் சரிப்பார்த்து அனுப்பியது லாரி ஓட்டுநர்களையே ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது

இவ்வாறு தினந்தோறும் அதிகப்படியான ரூபாயை வசூலித்து,லாரி ஓட்டுநர்களை தரைகுறைவாக நடத்தும் அதிகாரிகள் மீது ஒசூர் ஆர்டிஓ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒசூர் பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.