ETV Bharat / state

ஓசூரில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய வருவாய்த் துறையினர்

author img

By

Published : Aug 13, 2020, 7:33 PM IST

கிருஷ்ணகிரி: ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கபசுர குடிநீரை வருவாய்துறையினர் வழங்கினர்.

Hosur Revenue officials provided kabasura kudineer water

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள கபசுரக் குடிநீர் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாக உள்ளது என சித்த மருத்துவம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசும் கபசுர குடிநீரை மக்கள் பருக அறிவுறுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஒன்றிய அலுவலகம், மகளிர் காவல்நிலையம், வேளாண்மை துறை, போக்குவரத்துக் காவல் நிலையம் என அரசு அலுவலகங்கள் ஒருங்கிணைந்து அமைந்திருப்பதால், தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், அவ்வாறு வரும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கபசுர குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி ஓசூர் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரன் பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.