கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலையின்றியும் உணவு, இருப்பிடம் இல்லாதும் தத்தளித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலருக்கு மாவட்ட நிர்வாகம் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது. இருந்தபோதிலும், பெரும்பாலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பினர்.
மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு இடம்பெயர்ந்தோரை சொந்த ஊருக்குச் செல்ல அனுமதியளித்ததைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதன்படி, தமிழ்நாட்டிலிருந்தும் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், இன்று ஓசூரிலிருந்து உத்தரப் பிரசேத மாநிலத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயலில் 1,600 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சிறப்பு ரயிலில் அனுப்பப்பட்ட நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
அவர்கள் அனைவருக்கும் உணவு, தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் வழங்கினார்.
இதையும் படிங்க: குடிபெயர் தொழிலாளர் தலையெழுத்தை மாற்றுமா சிறப்பு நிதிச்சலுகை?