ETV Bharat / state

மகன் இறந்த துக்கத்திலும் இளைஞனுக்கு உதவிய எம்எல்ஏ - hosur Dmk mla prakash

தேசிய கபடி போட்டிக்குத் தேர்வாகியும் நேபாளத்திற்குச் செல்ல முடியாமல் தவித்த இளைஞனுக்கு ஓசூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஒய். பிரகாஷ் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இளைஞனுக்கு உதவிய எம்எல்ஏ
இளைஞனுக்கு உதவிய எம்எல்ஏ
author img

By

Published : Sep 7, 2021, 1:16 PM IST

Updated : Sep 7, 2021, 4:10 PM IST

கிருஷ்ணகிரி: ஓசூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஒய். பிரகாஷ். கடந்த வாரம் கர்நாடக மாநிலம் கோரமங்களா பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் இவரது மகன் கருணா சாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் உயிரிழந்த துக்கத்தில் இருந்துவந்துள்ளார்.

இந்தநிலையில் ஓசூர் மத்திகிரியைச் சேர்ந்த சாரதி என்ற இளைஞன் நேபாளத்தில் நடைபெற உள்ள தேசிய கபடி கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் 19 வயதுக்குள்பட்ட பிரிவில் தேர்வாகியும் நேபாளத்திற்குச் செல்ல முடியாமல் தவித்துவந்துள்ளார். இதையறிந்த ஒய். பிரகாஷ் இளைஞன் சாரதியை அழைத்து நிதியுதவி வழங்கி வாழ்த்தியுள்ளார்.

இளைஞனுக்கு உதவிய எம்எல்ஏ

மகன் இறந்த துக்கத்திலும் மற்றவா்களுக்கு உதவிய சட்டப்பேரவை உறுப்பினரை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க: பெங்களூரு கோர விபத்து: திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் உள்பட 7 பேர் மரணம்

Last Updated : Sep 7, 2021, 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.