கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலத்தில் காவிரிக் கரையோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நாட்றம்பள்ளி, தேன்கனிக்கோட்டை, கே ரெட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தபடியே உள்ளது.
இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த மூன்று நாள்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, ஒகேனக்கலில் நேற்று (அக்.02) வரை நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்நிலையில் இன்று (அக்.03) இரண்டாயிரம் கனஅடி அதிகரித்து, நீர்வரத்தானது 16 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
மேலும், அடுத்த இரண்டு நாள்களுக்கு மழைப்பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், நீர்வரத்து தொடர்ந்து உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஒக்கேனக்கல்லில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆசிரியரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மாணவர்கள் - நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு