ETV Bharat / state

'கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர் கல்வி பயிலும் மாநிலம் தமிழ்நாடு' - higher education minister k.p.anbzhagan about tamilnadu education

கிருஷ்ணகிரி: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர் கல்வி பயின்று வருகின்றனர் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் கே. பி.அன்பழகன்

author img

By

Published : Feb 23, 2020, 10:15 AM IST

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் விளையாட்டு, கவின், நுண்கலை என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதனைத் தொடக்கிவைத்த பின் உரையாற்றிய உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், "தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி பயில புதிய பாடத் திட்டங்களை வழங்கி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெரும் தொண்டாற்றினார். இதனால் இந்தப் பகுதிகளில் உயர் கல்வித் துறை பயிலும் மாணவர்கள் சதவீதம் அதிகரித்தது.

2011ஆம் ஆண்டுக்குப் பிறகு 45 கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 961 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. எம்.பில். படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம். உயர் கல்வி தேர்ச்சி பெறுவதில் கூட தமிழ்நாட்டு மாணவர்கள் முதலிடத்தில் உள்ளனர். ஆக அனைத்து விதத்திலும் உயர் கல்வி பெறுவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. புதிய கல்லூரிகள் தொடங்கும் அதே வேளையில் கட்டமைப்பு வசதிகளையும் வழங்கும் அரசாக தமிழ்நாடு அரசு விளங்குகிறது. உள்கட்டமைப்பு வசதி, பாடப் பிரிவுகள், தேர்ச்சி சதவீதம் என அனைத்திலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது" என்று கூறினார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் கே. பி.அன்பழகன்

இதனையடுத்து பல்கலைக்கழக அளவில் விளையாட்டு, தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர், தமிழ்நாடு அரசின் மூன்று ஆண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினையும் அவர் தொடங்கிவைத்தார்.

இதையும் பார்க்க: தூத்துக்குடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் - முதலமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.