ETV Bharat / state

அதிமுக வேட்பாளரை வரவேற்க வைத்த பட்டாசால் தீ விபத்து! - lok sabha election 2019

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையில் அதிமுக வேட்பாளரை வரவேற்க வைத்த பட்டாசால் அண்ணா சிலை ரவுண்டானா புல்தரைகள்  பற்றி எரிந்தது. தீப்பற்றி எரிவதைக் கண்டுகொள்ளாமல் தேர்தல் பரப்புரையில் வேட்பாளர்கள் ஈடுபட்டனர்.

admk-campaign-at-uthankarai
author img

By

Published : Apr 16, 2019, 11:29 PM IST

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 6மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் இன்று பரப்புரை மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் கேபி முனுசாமி திருவனப்பட்டி, நொச்சிப்பட்டி, மேட்டுதாங்கல், கல்லாவி உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவிட்டு ஊத்தங்கரை ரவுண்டானா வந்தபோது அவரை வரவேற்க பட்டாசு வைக்கப்பட்டது. பட்டாசு வெடித்ததில், அண்ணா சிலையில் உள்ள ரவுண்டானா தீப்பொறி பற்றி எரிந்தது. லட்சக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட இந்த ரவுண்டானாவில் உள்ள புற்கள் பற்றி எரிந்து நாசமானது.

இந்த செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கபடுமா என எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் அதிமுகவினர் தீப்பற்றி எரிவதையும் கண்டுகொள்ளாமல் வாக்கு சேகரிப்பில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி வந்தனர். தெருவோரத்தில் கடை நடத்தி வருபவர்கள் அவர்கள் கடை எங்கும் தீப்பற்றி எரிந்து விடுமோ என அச்சத்தில் தண்ணீரைக் கொண்டு அணைத்து வந்தனர். பிறகு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

அதிமுக வேட்பாளரை வரவேற்க வைத்த பட்டாசால் தீ விபத்து

அதிமுக வேட்பாளரை வரவேற்க வைத்த பட்டாசால் அண்ணா சிலை ரவுண்டானா புல்தரைகள்  பற்றி எறிந்தது. எரிவதை கண்டுகொள்ளாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் கடைசி நாளான இன்று பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் கேபி முனுசாமி இன்று  திருவனப்பட்டி நொச்சிப்பட்டி மேட்டுதாங்கல் கல்லாவி  உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவிட்டு ஊத்தங்கரை ரவுண்டானா  வந்தபோது வரவேற்கப் பட்டாசு வைத்த தொண்டர்களால் அண்ணா சிலை உள்ள ரவுண்டானா தீப்பொறி  பற்றி எரிந்தது. லட்சக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட இந்த ரவுண்டானாவில் உள்ள புற்கள் பற்றி எரிந்து நாசமானது. இதனை தேர்தல் அலுவலர்கள் வேட்பாளர் கணக்கில் சேர்க்கபடுமா என எதிர்கட்சி கேள்வி எழுப்பியுள்ளனர். தீப்பற்றி எரிவதையும் கண்டுகொள்ளாமல் வாக்கு சேகரிப்பில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி வந்தனர். வழியில் கடை நடத்தி வரும் வருபவர்கள் அவர்கள் கடை எங்கு தீப்பற்றி எரிந்து விடுமோ என  அச்சத்தில் தண்ணீரைக் கொண்டு அனைத்து வந்தனர். பிறகு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீப்பற்றிய ஊத்தங்கரை ரவுண்டானாவை அணைத்தனர்

Visuals on ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.