கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் பிறந்தநாள், குடியரசு தினவிழா சார்பில் அரசு விழாவாக நடைபெற்ற 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் சூளகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வட்டார, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
தடகள போட்டிக்கு இரண்டு மாணவிகளும், சதுரங்க போட்டிக்கு இரண்டு மாணவிகளும், டேபிள் டென்னிச் போட்டிக்கு இரண்டு மாணவிகளும், சிலம்பம் போட்டிக்கு நான்கு மாணவிகளும், ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு ஒரு மாணவியும், கேரம்போர்டு போட்டிக்கு ஒரு மாணவியும் வெற்றிபெற்று மொத்தம் 12 மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
வெற்றிபெற்ற மாணவிகளை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், உப தலைவர், பொருளாளர் மேலும் அப்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களைப்பெற 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை