ETV Bharat / state

'தாக்கியவரை கைது செய்யனும்' - ரத்தம் சொட்ட சொட்ட பழ வியாபாரி மறியல்! - ஓசூர் அரசு மருத்துவமனை

ஓசூரில் தன்னை தாக்கிய அடையாளம் தெரியாத நபரை கைது செய்ய வேண்டும் என தலையில் ரத்தம் சொட்ட சொட்ட பழ வியாபாரி சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

பழ வியாபாரியை தாக்கிய மர்மநபர்; கைது செய்ய கோரி சிகிச்சைக்கு மறுத்து மறியல்..

author img

By

Published : Nov 21, 2022, 3:22 PM IST

Updated : Nov 21, 2022, 3:47 PM IST

கிருஷ்ணகிரி: ஓசூர், தேர்ப்பேட்டையைச் சேர்ந்தவர், சேகர் (26). பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஓசூர் ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள உணவகத்தில் இன்று சாப்பிட சென்றபோது, அங்கு தகராறு ஏற்பட்டு அங்கிருந்த பொருட்களை எடுத்து போட்டு உடைத்தார். இதை அறிந்த ஓசூர் நகர போலீசார் சேகரை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சேகரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தலையில் பலமாக கட்டையால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு வந்த சேகர், தன்னை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சிகிச்சை செய்து கொள்ளமாட்டேன் எனக் கூறி, தலையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள தேன்கனிக்கோட்டை பிரதான சாலையில் அமர்ந்து 15 நிமிடங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சேகர் மறியலைக் கைவிட்டு சிகிச்சைப் பெற்றுக்கொண்டார்.

தாக்கியவரை கைது செய்யக்கோரி சிகிச்சைக்கு மறுத்து பழவியாபாரி மறியல்

ஓசூர் அரசு மருத்துவமனையில் சேகருக்கு, தலையில் ஏற்பட்ட காயத்திற்கு 13 தையல் போடப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சேகரை தாக்கிய அடையாளம் தெரியாத நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: போலீசார் கட்டுப்பாடுக்குள் வந்தது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...

Last Updated : Nov 21, 2022, 3:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.