ETV Bharat / state

ஓசூர் அம்மா உணவகத்தில் தினமும் 20 ஆயிரம் பேருக்கு இலவச உணவு! - Free food daily at Mom's Restaurant

ஓசூர்: ஓசூரில் உள்ள இரு அம்மா உணவகங்கள் மூலம் தினசரி, 20 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.

ஓசூர் அம்மா உணவகம்
ஓசூர் அம்மா உணவகம்
author img

By

Published : Apr 30, 2020, 3:18 PM IST

ஊரடங்கால் ஓசூரில் உணவுக்கு சிரமப்படும் ஏழை, எளியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்களுக்கு, பஸ் ஸ்டாண்ட் மற்றும் ஏரித்தெரு அம்மா உணவகங்களில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாள்தோறும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இங்கு வர முடியாமல் இருப்பவர்கள் வீட்டிலிருந்து போன் செய்தால் அவர்களது இருப்பிடத்துக்கே சென்று உணவு வழங்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓசூரில் உள்ள இரு அம்மா உணவகங்கள் மூலம் தினசரி 20 ஆயிரம் பேருக்கு இலவச உணவு

மேலும் ஓசூர், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 1000க்கும் மேற்பட்டோருக்கு அம்மா உணவகத்தில்தான் நாள்தோறும் உணவு வழங்கப்படுகிறது.

இங்கு, சாம்பார், தயிர், லெமன், புளியோதரை, உப்மா, பொங்கல் என சுழற்சி முறையில் மூன்று வேளையும் நாளொன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், பார்சல் மூலமாகவும் உணவு வழங்கப்படுகிறது.

இந்த அம்மா உணவகத்தில் இலவச உணவுக்கு அரசு சார்பில் 25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் குடியிருப்போர் சங்கங்கள் 25 லட்சம் ரூபாய்க்கு அம்மா உணவகத்துக்கு தேவையான உணவு பொருள்களை வழங்கியுள்ளனர். மேலும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்க்கு அனைத்து செலவுகளையும் அ.தி.மு.க. ஏற்றுக்கொள்வதாக கூறி, முதல்கட்டமாக ஐந்து லட்சத்துக்கான காசோலையை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வழங்கி உள்ளார்.

இதையும் படிங்க: பெரம்பலூரில் மேலும் இருவருக்கு கரோனா; எண்ணிக்கை 9ஆக உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.