ETV Bharat / state

வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி நூதன மோசடி.. ஓசூரில் ரூ.70 லட்சம் சுருட்டிய இளைஞர்கள் கைது! - வெளிநாட்டு அழைப்பு மோசடி

Hosur ISD call scam: ஓசூரில் வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றி சுமார் 70 லட்சம் ரூபாய் முறைகேடு செய்த புகாரில் இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 5:36 PM IST

பறிமுதல் செய்யப்பட்ட கணினிகள், செல்போன்கள்

கிருஷ்ணகிரி: ஓசூரில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை, உள்நாட்டு தொலைபேசி அழைப்புகளாக மாற்றி குற்ற செயலில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இணையதள இணைப்பு வாயிலாக சட்டத்திற்கு புறம்பாக மாற்றி சுமார் 70 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய புகாரில் இரண்டு இளைஞர்கள் ஓசூர் மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த முறைகேடுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு செல்போன்கள், கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் ரூட்டர்களை அவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் ஐடியல் டெக்னாலஜிஸ் என்ற பெயரில் ஓசூர் கே.சி.சி.நகர் பகுதியை சேர்ந்த அருள் (34) என்பவர் அவுட்சோர்சிங் மையத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்த மையத்தில் 40 கம்ப்யூட்டர்கள் வைத்திருப்பதாகவும், ஆயிரம் போன் இணைப்புகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ளுவதற்காகவும், அதிவேக இணையதள இணைப்பை, ஜியோ பைபர் நிறுவனம் மூலம் பெற்றுள்ளார். இதன் வாயிலாக அவருக்கு கொல்கத்தாவை சேர்ந்த ராஜீவ் என்பவரது தொடர்பு ஏற்பட்டுள்ளது.

70 லட்சம் மோசடி: இந்நிலையில், இந்த கட்டமைப்பை பயன்படுத்தி வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றுவதால் பல லட்சம் ரூபாய் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி உள்ளார். இதற்கு மயங்கிய அருள், இதற்கான முயற்சிகளை ஐபி அட்ரஸ் வாயிலாக மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் நாடு உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை, இன்டர்நெட் வாயிலாக அதிக நேரம் பேசக்கூடிய அளவிற்கு உள்நாட்டு அழைப்புகளாக மாற்றி, சுமார் 70 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.

இதனை சென்னையில் செயல்பட்டு வரும் தொலை தகவல் தொடர்பு பாதுகாப்பு இயக்குநரகத்தின் உதவி இயக்குநர் கண்காணித்து உள்ளார். பின்னர், நுண்ணறிவு பிரிவு துறையினருக்கு அளித்த புகாரின் அடிப்படையில், இதில் இணைப்பு வழங்கிய ஜியோ நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இணையதள இணைப்பை பயன்படுத்தி அருள் என்பவர், ஓசூரில் சட்டவிரோத தொழில்நுட்ப முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இளைஞர்கள் கைது: இதனைத் தொடர்ந்து ஜியோ நிறுவனத்தின் குறை தீர்ப்பு அதிகாரியான சந்திரமௌலி என்பவர், அளித்த புகாரின் அடிப்படையில், ஓசூர் மாநகர இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அருள் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சரவணன் ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.

இந்த தொழில்நுட்ப முறை கேட்டிற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கம்ப்யூட்டர்கள், இரண்டு லேப்டாப்,செல்போன்கள், ரவுட்டர் உள்ளிட்ட உபகரணங்களை அவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், இந்த முறைகேட்டில் தலைமறைவாக உள்ள மூளையாக செயல்பட்ட ராஜீவ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையை சுற்றி என்ன நடக்கிறது? இந்த செய்தியில தெரிஞ்சுக்கோங்க!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.