கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அதில் 2001-2006 வரை ஓசூர் ஒன்றிய சேர்மனாக பணியாற்றிய கந்தப்பன் திமுகவிலிருந்து விலகி காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் விஸ்வநாதன் உள்ளிட்ட 100க்கும் மேற்ப்பட்டோருடன் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைந்துக்கொண்டனர்.
பின்னர் அதிமுகவில் புதியதாக இணைந்தவர்களுக்கு அதிமுகவின் சால்வை அணிவித்து அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அதிமுகவில் இணைந்த கந்தப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நான் 2001 - 2006 வரை பாஜக சார்பாக ஓசூர் ஒன்றியக்குழு தலைவராக சிறப்பாக பணியாற்றினேன். பின்னர் திமுகவில் இணைந்தேன். ஓசூர் பகுதியில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற பாலகிருஷ்ணா ரெட்டியால் மட்டுமே பலக்கோடிக்கணக்கான நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன.
திமுகவில் உள்ளவர்களை அதன் தலைமை குறிப்பிட்ட நபர்களை விட மற்றவர்களை வளர விடுவதில்லை. அதிமுகவின் சிறப்பான ஆட்சி பார்த்து தான் நாம் இணைந்துள்ளேன்'' என்றார்.
இதையும் படிங்க: எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு : வீடுகளில் கறுப்பு கொடிகள் கட்டி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!