ETV Bharat / state

சிலம்பத்தில் அசத்தி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 5 வயது மாணவி

கிருஷ்ணகிரி: சூளகிரியைச் சேர்ந்த ஐந்து வயது மாணவி ஸ்வேதாஸ்ரீ, மாநில, தேசிய, உலக அளவிலான சிலம்பம் போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் உலக இளம் வயது சாதனையாளருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

silambam
author img

By

Published : Nov 13, 2019, 10:15 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்த்தவர் பவித்ராமன். இவரது ஐந்து வயது மகள் ஸ்வேதாஸ்ரீ கடந்த எட்டு மாதங்களாக சிலம்பம், வில்வித்தை, ஸ்கேட்டிங் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளைப் பெற்றுவந்தார். இவர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற சிலம்பம் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.

இது தவிர ஈரோட்டில் உலக சிலம்ப விளையாட்டு சங்கம் நடத்திய மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் முதலிடத்தையும் யூத் ஓவர் ஆல் கேம்ஸ் அசோசியேஷன் சார்பில் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் முதலிடம் பிடித்தும் அசத்தினார் ஸ்வேதாஸ்ரீ.

மேலும் சேலத்தில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பம் போட்டியில் முதல் பரிசை வென்று தங்க நாணயத்தை பரிசாகப் பெற்றுள்ளார். இதுபோன்று பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தொடர்ந்து முதலிடத்தைப் பெற்றிருப்பதால் சிலம்பத்தில் இளம்வயது சாதனையாளருக்கான அங்கீகாரமாக பிராவோ இன்டர்நேஷனல் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட் புத்தகத்தில் ஸ்வேதாஸ்ரீ இடம்பிடித்துள்ளார்.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த ஐந்து வயது மாணவி ஸ்வேதாஸ்ரீ மாநில அளவில் நடைப்பெற்ற சிலம்பம் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை.
Body:கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த ஐந்து வயது மாணவி ஸ்வேதாஸ்ரீ மாநில அளவில் நடைப்பெற்ற சிலம்பம் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை.

 கிருஷ்ணகிரி மாவட்டம்  சூளகிரியை சேர்த்தவர் பவித்ராமன் இவரது  
ஐந்து வயது ஸ்வேதா ஸ்ரீ கடந்த  8 மாதங்களாக சிலம்பம், வில்வித்றை ஸ்கேட்ங் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை பெற்று வந்தார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி உளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைப்பெற்ற சிலம்பம் போடிகளில் கலந்துக் கொண்டு பல்வேறு  பதக்கங்களை  வென்று சிலம்பத்தில் உலக இளம் வயது  சாதனையாளருக்கான விருதை  பெற்றுள்ளார்.

மேலும் ஈரோட்டில் உலக சிலம்ப விளையாட்டு சங்கம் நடத்திய மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் முதலிடத்தையும்,
கோவாவில்  யூத் ஓவர் ஆல் கேம்ஸ் அசோசியேசன் நடத்திய  தேசிய அளவிலான  சிலம்பப் போட்டியில் முதலிடத்தையும்,   
சேலத்தில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் முதல் பரிசை வென்று தங்க நாணயத்தை பரிசாகப் பெற்றுள்ளார்.மேலும் இதுபோன்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து முதலிடத்தை பெற்றிருப்பதால்  சிலம்பத்தில் இளம்வயது சாதனையாளருக்கான  அங்கீகாரம் பிரேவோ இன்டர்நேஷனல் புக்  ஆப் வோல்டு ரெக்கார்ட்    புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.