ETV Bharat / state

கிருஷ்ணகிரி ஆணவக் கொலை: மகனைக் கொன்ற தந்தை கைது - krishnagiri honor killing

கிருஷ்ணகிரியில் மகன் மற்றும் தாயை ஆணவக் கொலை செய்த தந்தையை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி ஆணவக் கொலை: மகனைக் கொன்ற தந்தை கைது

author img

By

Published : Apr 15, 2023, 10:47 PM IST

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தில், இன்று (ஏப்ரல் 15) அதிகாலை தனது மகன் மற்றும் தாயை வெட்டி கொலை செய்த தந்தை தண்டபாணியை தேடி வந்த தனிப்படை காவல் துறையினர், இன்று மாலை அவரை கைது செய்தனர். முன்னதாக கொலை சம்பவத்தை நிகழ்த்திய தண்டபானி, ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் பகுதியில், ஈமச்சடங்கு செய்யும் தென்பனையாற்றில், மகன் மற்றும் தாய் உயிரிழந்ததற்காக தலைமுழுகி உள்ளார்.

பின்னர் அங்கு இருந்து மேல் தீர்த்தம் பெற, தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை பகுதிக்குச் சென்று தீர்த்தம் ஆடி உள்ளார். இதனையடுத்து அங்கு இருந்த வனப் பகுதியில் சுற்றி வந்த தண்டபாணி, தன்னைத் தானே கழுத்துப் பகுதியில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஊத்தங்கரை காவல் நிலையம் நோக்கி வந்த நபர் (தண்டபானி), புதிதாக கட்டிய காவல் நிலையத்தை தெரியாமல், ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தை நோக்கிச் சென்றுள்ளார்.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியில் இருந்தவர்கள், கழுத்தில் வெட்டுக் காயத்துடன் ஒரு நபர் சுற்றி வருவதாக ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில், ஊத்தங்கரை காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில், ஊத்தங்கரை முழுவதும் பல இடங்களில் அந்த நபரை தேடி வந்துள்ளனர். அப்போது அரச மரத்தை அடுத்த தனியார் புக் ஸ்டோர் அருகில் வைத்து தண்டபாணியை காவல் துறையினர் பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிப்பதற்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் பார்த்திபன், இரட்டை கொலை வழக்கில் தண்டபாணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் ஆணவக் கொலை: மகனைக் கொன்ற தந்தை.. மருமகளுக்கு தீவிர சிகிச்சை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.