கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அடுத்த அத்திமுகம் அருகே தனது 10 வயது மகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க அவரது தந்தை அப்பகுதியிலுள்ள கிணற்றிற்கு அழைத்துச்சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.
அதனைக்கண்ட சிறுமியின் தந்தை அவரை காப்பாற்ற முற்பட்டு கிணற்றில் குதித்துள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.