கிருஷ்ணகிரி: ஒசூர் அடுத்த ஜவளகிரி வனப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் காட்டுயானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதனிடையே, வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் காட்டுயானை உயிரிழந்து கிடப்பதை அறிந்து வனத்துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் உயிரிழந்த பெண் காட்டுயானையின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதே இடத்தில் காட்டுயானையின் உடலை உடற்கூறாய்வு பரிசோதனை செய்தனர். அப்போது காட்டுயானையின் உடலில் பாஸ்பரஸ் குண்டுகள் துளைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காட்டுயானையை அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு இருக்கலாம் என தெரியவந்தது.


இது குறித்து வனத்துறை அலுவலர்கள் நடத்திய தீவிர விசாரணையில் ஜவளகிரி அடுத்த திம்மன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாரப்பன் (50) என்பவர் நாட்டு துப்பாக்கியால் பெண் காட்டுயானையை சுட்டது தெரியவந்தது. இதனையடுத்து மாரப்பனை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் நினைவு தினம்