ETV Bharat / state

லியோ படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் தியேட்டர் சுவரை ஏறி குதித்த ரசிகர் கால் எலும்பு முறிவு! - கிருஷ்ணகிரி செய்திகள்

Krishnagiri Leo Movie: கிருஷ்ணகிரியில் நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தை பார்க்க டிக்கெட் கிடைக்காததால் திரையிரங்கின் பின் பக்க சுவற்றில் ஏறி குதித்த விஜய் ரசிகரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

லியோ படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் தியேட்டர் சுவரை ஏறி குதித்த ரசிகர் கால் எலும்பு முறிவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 7:10 PM IST

லியோ படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் தியேட்டர் சுவரை ஏறி குதித்த ரசிகர் கால் எலும்பு முறிவு!

கிருஷ்ணகிரி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும், விஜய் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் லியோ படம் வெளியானதைத் திருவிழா போல் கொண்டாடினர்.

லியோ படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், சிறப்புக் காட்சி திரையிடப்படாததால் முதல் காட்சி டிக்கெட் பெற ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பிளாக்கில் லியோ பட டிக்கெட் விலை 1000 ரூபாய் வரை விற்கப்பட்டது. லியோ படத்தின் டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டால் அரசிடம் புகார் தெரிவிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் தொலைப்பேசி எண்களை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி பச்சிகானப்பள்ளி பகுதியைச் சேர்ந்த விஜய் ரசிகரான அன்பரசு, லியோ படத்திற்கு முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காததால் காலை முதலே திரையரங்கம் உள்ளே அனுமதிக்குமாறு திரையரங்க நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்த வந்துள்ளார்.

இதனையடுத்து அன்பரசு திரையரங்கின் பின்பக்க சுவற்றில் ஏறி குதித்து உள்ளே செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது கால் தவறி சுவற்றில் இருந்து கீழே விழுந்ததில் அவருக்குக் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இளைஞரை மீட்ட காவல்துறையினர் அறிவுரை கூறி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர் ஒருவர் காயமடைந்தது ஒரு புறமிருக்க, புதுக்கோட்டை மாவட்டத்தில் லியோ படத்தை வெளியிட்ட திரையரங்கில் சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. விஜய் ரசிகர்களான காதல் ஜோடி வெங்கடேஷ் மற்றும் மஞ்சுளா ஆகியோர் நடிகர் விஜய்யின் தலைமையில் திருமணம் நடைபெற வேண்டும் என ஆசைப்பட்டு வந்த நிலையில், இன்று லியோ படம் வெளியான திரையரங்கில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

முன்னதாக கடந்த பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தின் கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் சென்னை ரோகிணி திரையரங்கம் அருகில் லாரியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காவல்துறை கட்டுப்பாட்டால் லியோ ரிலீஸை கொண்டாட முடியாமல் குமறும் விஜய் ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.