கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை காணப்படுகிறது. ஓசூர் பகுதியில் தட்பவெப்பநிலை மாறியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் இந்த குளிர்ச்சியான சூழ்நிலை காரணமாக வெளிநாட்டுப் பறவைகள், ஓசூர் பகுதிகளிலுள்ள முக்கிய நீர்நிலைகளான இராமநாயக்கன் ஏரி, சந்திராம்பிகை ஏரி, அலசநத்தம் ஏரி, ஓசூர் கெலவரப்பள்ளி அணை உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் இடங்களில் வெளிநாட்டுப் பறவைகள் ஜோடிகளோடு ஆனந்தமாக இறை தேடுவது பார்ப்பவர்களை பரவசப்படுத்தி வருகிறது.