தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகளுக்கு உணவு, தண்ணீர் போதிய அளவில் கிடைப்பதில்லை, வனத் துறையினர் பல்வேறு இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து வனவிலங்குகளின் தாகத்தைத் தீர்த்துவைத்தாலும் உணவு, தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது இடம்பெயர்ந்து வருகின்றன.
தண்ணீரைத் தேடி கன்றுகளுடன் இடம்பெயர்ந்த காட்டு யானைகள்! - Elephants Crossing the road
கிருஷ்ணகிரி: ஜவளகிரி வனப்பகுதியில் தண்ணீர், உணவைத் தேடி 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கூட்டமாகச் சாலையைக் கடந்துசெல்லும் காட்சி வெளியாகியுள்ளது.
Elephants
தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகளுக்கு உணவு, தண்ணீர் போதிய அளவில் கிடைப்பதில்லை, வனத் துறையினர் பல்வேறு இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து வனவிலங்குகளின் தாகத்தைத் தீர்த்துவைத்தாலும் உணவு, தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது இடம்பெயர்ந்து வருகின்றன.
அப்போது சாலையில் மனிதர்கள் நடமாட்டம் உள்ளதா வாகனங்கள் செல்கின்றனவா எனப் பார்த்து காட்டு யானைகள் கூட்டம் சாலையைக் கடந்துசென்றன. யானைகள் கூட்டத்தை வழிநடத்தும் பெண் காட்டு யானை முன்னே செல்ல அதன் பின்னர் மற்ற காட்டு யானைகள் அதன் கன்றுகள் தொடர்ந்து ஒய்யாரமாக நடந்துசெல்கின்றன.