கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று மணி நேரமாக யானைகள் இரு குழுக்களாகப் பிரிந்து மலர்ச் செடிகளையும், மா மரத்தின் கிளைகளையும், பயிர்களுக்கு உள்ளேயும் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. யானையின் அட்டகாசத்தை அருகிலிருந்த ஒரு தோட்டக்காரர் காணொலி எடுக்கச் சென்றபொழுது அவரை கூட்டத்தில் உள்ள ஒரு யானை துரத்தி சென்றது.
அந்த காணொலி வாட்ஸ் அப்பில் பரவிவருகிறது. இதுகுறித்து ராயக்கோட்டை வனத்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: