கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த நாரிபுரம் துணை மின்நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் நவாப்ஜான் (40). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் இன்று (ஜூன் 15) பாகலூர் துணை மின்நிலையத்தில் பணி இருப்பதாக கூறி உயர் அலுவலர்கள் அனுப்பி வைத்துள்ளனர். வழக்கம் போல துணைமின் நிலையத்திலுள்ள மின்மாற்றியில் ஏற்பபட்ட பழுதை நீக்க மின்சாரத்தை நிறுத்தி வைத்து, மின்மாற்றி மீது பணி செய்துள்ளார்.
அப்போது மின்சாரம் தாக்கி மின்கம்பதிலேயே நவாப்ஜான் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சபவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நவாப்ஜானை திட்டமிட்டே கொலை செய்திருப்பதாக அவரது தம்பி பாரூக் பகிரங்கமாக குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார்.
15 நபர்கள் பணி செய்யக்கூடிய துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தி வைத்த பின்பே பணிசெய்ய அனுமதிக்கப்பட கூடிய சூழலில் திடீரென மின் இணைப்பு வழங்கி திட்டமிட்டே கொலை செய்திருப்பதாகவும், காலையில் உயிரிழந்தவரின் உடலை நண்பகலாகியும் அலுவலர்கள் நேரில் வராதது சந்தேகத்தை ஏற்ப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈட்டை வழங்கி உயர் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.