இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரபாகர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, 6 சட்டமன்ற தொகுதிக்களுக்குட்பட்ட 1850 வாக்குச்சாவடிகளுக்கு தலா ஒரு இயந்திரம் தயார் நிலையில் உள்ளது. ஓசூர் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு சேர்த்து கூடுதலாக மொத்தம் 2 ஆயிரத்து 605 வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட அஞ்சலி தாலுகா மற்றும் கெலமங்கலம் தள்ளி போன்ற மலைப்பகுதிகளில் 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 17 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வனத்துறையுடன் இணைந்து வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வது, வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மலைப் பகுதிகளில் தங்குவதற்கு, உணவு வசதி, குடிநீர் வசதி போன்ற அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார்.
குறிப்பாகப் பதற்றமான வாக்குச்சாவடிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கண்டறியப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக நான்கு சக்கர வாகன வசதிகள் தேவைப்படும் பகுதிகள் 865 பகுதிகள் தேவைப்படும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதில் தற்போது 817 மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து விளக்கினார்.