ஓசூர் அருகே தளி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கெலமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் இன்று (மார்ச் 15) காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அங்குள்ள கூட்டு ரோடு பகுதியில் வந்த கார்களை அவர்கள் மடக்கி சோதனையிட்டனர். அப்போது, ஓசூரிலிருந்து கெலமங்கலம் நோக்கி சென்ற ஏ. கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் காரை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சோதனையிட்டபோது, ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது.
அந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பணம் முழுவதையும் அலுவர்கள் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அந்தப் பணத்தை தேன்கனிகோட்டை வட்டாட்சியர் தண்டபாணியிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: விதிமுறை மீறியதாக வாகனம் பறிமுதல்: திமுக - எஸ்டிபிஐ இடையே மோதல்