ETV Bharat / state

காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி: சாலையில் கொட்டப்படும் அவலம்! - krishnakiri

கிருஷ்ணகிரி: ஓசூர் பகுதிகளில் முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், அவற்றை சாலையில் கொட்டி செல்லும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி: சாலையில் கொட்டப்படும் அவலம்!
author img

By

Published : Apr 22, 2019, 2:48 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறி வகைகளும் பழம், கீரை, உள்ளிட்ட தோட்டக்கலைப் பொருட்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதுபோலவே ஏக்கர் கணக்கில் முருங்கை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் காய்கும் முருங்கை காய், கீரை ஆகியவை மார்க்கெட்டுகளில் விவசாயிகள் விற்று வருகின்றனர்.

கடந்த வாரம் வரை 10 முருங்கை காய்களை கொண்ட ஒருக்கட்டு 50 முதல் 70 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முருங்கையின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சூளகிரி மார்க்கெட்டில் முருங்கைக்காய் ஒன்று 50 பைசாவிற்கு மட்டும் சிலர் கேட்பதாகவும், பெரும்பாலானோர் வாங்கவே விரும்பாததால், முருங்கைக்காய் கொண்டுவரப்பட்ட வாகனங்களுக்கு மீண்டும் எடுத்துச்செல்ல வாடகை தர வேண்டும் என்பதற்காக விவசாயிகள் மார்க்கெட் சாலையில் வேதனையுடன் அவற்றை கொட்டிவிட்டு செல்கின்றனர்.

அந்த முருங்கை காய்களை சுற்றுப்பகுதி மக்கள் எடுத்து சென்ற மாடுகளுக்கு அவற்றை உணவாக வழங்கி வருகின்றனர். இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் நஷ்டஈட்டுத் தொகையை அரசு வழங்கிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி, சந்தையில் வாங்கப்படாமல் சாலையில் கொட்டி செல்லும் அவலம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் கேரட்,பீட்ருட்,முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் வகைகளும் பழம், கீரை,உள்ளிட்ட தோட்டக்கலைப் பொருட்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

அதுபோலவே ஓசூர் சுற்றுப்பகுதிகளில் சில ஏக்கர்களில் முருங்கை மரங்கள் பராமரிக்கப்பட்டு ஓசூர்,சூளகிரி,இராயக்கோட்டை உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் விவசாயிகள் விற்று வருகின்றனர்.

கடந்த வாரம் வரை 10 முருங்கை காய்களை கொண்ட ஒருக்கட்டு 50 முதல் 70 ரூபாய் வரை விற்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முருங்கையின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

சூளகிரி மார்க்கெட்டில் முருங்கைக்காய் ஒன்று 50 பைசாவிற்க்கு மட்டும் சிலர் கேட்பதாகவும், பெரும்பாலானோர் வாங்கவே விரும்பாததால்.

முருங்கைக்காய் கொண்டுவரப்பட்ட வாகனங்களுக்கு மீண்டும் எடுத்துச்செல்ல வாடகை தர வேண்டும் என்பதற்காக விவசாயிகள் மார்க்கெட் சாலையில் வேதனையுடன் கொட்டி சென்றுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள மாடுகள் மேய்ந்தும், சுற்றுப்பகுதி மக்கள் தேவையாட அளவிற்க்கு எடுத்து சென்று வருகின்றனர்.

முருங்கை மரங்களை பராமரித்து வரும் விவசாயிகள் வருவாய் இழப்பை ஈடுக்கட்டும் வகையில் நஷ்ட ஈட்டுத்தொகை அரசு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Visual on ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.